Skip to main content

முற்றுகையிட்ட தொகுதி மக்கள்!  டென்ஷன் அடைந்த ஓபிஎஸ்!!

Published on 10/12/2018 | Edited on 10/12/2018
ops

 

பாராளுமன்ற தேர்தலும் இடைத்தேர்தலும் கூடிய விரைவில் வர இருப்பதால் அமைச்சர்களும் அவ்வப்போது தொகுதி பக்கம் தலை காட்டி வருகிறார்கள். அதுபோலத் தான் துணை முதல்வர் ஓபிஎஸ் தேனி மாவட்டத்தில் உள்ள தனது போடி தொகுதியில் விசிட் அடித்து தொகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாமை நடத்தி வருகிறார்.

 

 கடந்த 7ம் தேதி போடி தொகுதியில் உள்ள தேனி ஒன்றிய பகுதியில் இருக்கக்கூடிய அரண்மனைப்புதூர்,  கோட்டைப்பட்டி,  வீரசின்னம்மாள் , பள்ளபட்டி,  மரியாதை வெட்டி உள்பட சில கிராமங்களுக்கு சென்ற ஓபிஎஸ்சை அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதோடு எங்கள் பகுதிக்கு முல்லைப் பெரியாறு ஆற்றில் இருந்து குடிநீரும் நூலகம் சாலை சாக்கடை கழிப்பிட வசதிகள் மற்றும் முதியோர் உதவித்தொகை வேண்டும் என கோரி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். அதை உடன் வந்த மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க உத்தரவிட்டார்.  

 

op

 

அதைத்தொடர்ந்து மறுநாள் எட்டாம் தேதி உப்பார்பட்டி திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இருக்கு மாலை நாலரை மணிக்கு ஓபிஎஸ் வந்தார்.   அப்போது அங்குள்ள மக்கள் எங்கள் பகுதிக்கு எங்கள் பகுதியில் குடிநீர் கழிப்பிட வசதிகள் இல்லை எனக் கோரி மனு கொடுத்த மக்களிடம் உங்கள் குறைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறி அப்பகுதி மக்கள் கொடுத்த மனுக்களையும் ஓபிஎஸ் பெற்றுக்கொண்டு கோட்டூர் புறப்பட்டார்.  ஆனால் கோட்டூரில் ஒருவர் தவறி விட்டதாக ஓபிஎஸ்-க்கு தகவல் கிடைக்கவே திரும்ப வரும்போது கோட்டூர் செல்லலாம் எனக் கூறி சீலையம்பட்டி மக்கள் குறைதீர்க்கும் முகாமுக்கு சென்றார்.  அப்பொழுது ஊர் எல்லையில் பொதுகழிப்பிடம் இருக்கும் இடத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மக்கள் ஓபிஎஸ் காரை திடீரென  முற்றுகையிட்டு ஆறு மாதமாக இந்த பொதுக்கழிப்பறையை சுத்தம் செய்யவும் இல்லை.  தண்ணீர்வசதியும் இல்லை.  அதனால நாங்கள் ரோட்டு ஓரங்களில் ஒதுங்கி வந்தோம் .   இப்ப நீங்க  வருகிறீர்கள் என்று தெரிந்தவுடன்  இந்த பாத்ரூமை சுற்றியிருந்த முள்செடிகளையும்.பாத்ரூமையும் சுத்தப்படுத்தி தண்ணீருக்காக பைப் லயனையும் பஞ்சாயத்து போர்டுகிளார்க்( ரதவேல்) போட்டுஇருக்கிறார் .  ஆனால்  அதில்  தண்ணீர் வரவில்லை பெயருக்கு மாட்டி இருக்கிறார்.  அதை வந்து பாருங்க என்று ஓபிஎஸ் சிடம் கூறினார்கள்.  அதற்கு ஓபிஎஸ்சும் அந்த பைப்பில் தண்ணீர்  கொடுக்க சொல்கிறேன் என்று
கூறினார்.

 

o

 

 அப்படி இருந்தும் கூட அந்த மக்கள் ஓபிஎஸ் காரை விடாமல் நீங்க இறங்கி வந்து கழிப்பறையை பாருங்க என தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.  இதனால் டென்ஷன் அடைந்த ஓபிஎஸ் உடனே காரை விட்டு இறங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.  பார்வையிட்டு விட்டு வெளியே வந்தார்.  அப்பொழுது அதன் அருகே நின்று கொண்டிருந்த மக்கள் இந்தப் பகுதியில் பாதிதான் போட்டிருக்கிறார்கள்.  பாதிக்குமேல் ரோடு போடவில்லை.  இந்த  இந்த கழிப்பறையை சுத்தம் செய்யாததாலா துர்நாற்றம் வீசிவருவதால் மக்கள் இந்த பகுதியில் போய் வர முடியவில்லை.  அதை சரி செய்ய சொல்லுங்கள் என முறையிட்டனர்.  

                    

o3

 

தொடர்ந்து  காரில் ஏறிய ஓபிஎஸ்சை ஸ்ரீ தளத்திலேயே மற்ற பகுதி மக்கள் மரித்து எங்கள் பகுதிக்கு 15 நாளைக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருகிறது அந்த தண்ணீரை முறையாக வருவது இல்லை அப்படி இருக்கும்போது சரி கட்ட சொல்லி எங்களை மிரட்டி வருகிறார் என முறையிட்டனர் அதையும் கேட்டுவிட்டு அருகே உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு சென்றார் அங்கு கூடியிருந்த மக்களும் குடிநீர். கழிப்பறை‌. லைட் வசதிகள் இல்லை என  ஓபிஎஸ் இடம் கூறினார்கள். அதைஎல்லாம்  பொறுமையாக கேட்டு விட்டு அந்த மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களையும் பெற்றார் ஆனால் சீலையம்பட்டியை  பொறுத்தவரை ஒரே சமூகத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தான் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள்.  அப்படி இருந்தும் கூட ஓபிஎஸ்சின் இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் வெறும் நூறு பேருக்குள் தான் கலந்துகொண்டனர்.  அந்த அளவுக்கு இப்பகுதியில்   பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இருந்தும் கூட  ஓபிஎஸ் நடத்திய குறைதீர்க்கும் கூட்டத்தை  புறக்கணித்து இருப்பதை பார்க்க முடிந்தது.  அதை கண்டு ஓபிஎஸ்சும் டென்ஷனாக இருந்தார்.  அதன்பின்  கோட்டூர் மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு ஒபிஎஸ் வருவார் என காலையிலிருந்து அப்பகுதி மக்களை திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து இருந்தனர் அப்படி இருந்தும் திடீரென ஓபிஎஸ் இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு   வரவில்லை வேறு ஒரு நாள் மனு வாங்கும் முகாம் நடைபெறும் என மைக்கில் கட்சிக்காரர்கள் கூறியதை  கண்டு மக்கள் டென்ஷனாகவே  திரும்பிச் சென்றனர்.  இப்படி திடீரென்று ஓபிஎஸ் கோட்டூர் புரோகிராமை கேன்சல் செய்தது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்