Skip to main content

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் (படங்கள்)

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

ஊரடங்கால் வேலையில்லாமலும், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமலும் சென்னை மயிலாப்பூரில் பல்வேறு இடங்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்தனர். அவர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காக இன்று பட்டினப்பாக்கம் காவல்நிலையம் அருகே வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநிலத்திற்குச் செல்லும் தொழிலாளர்கள் அனைவரும் ரயில் வரும் வரை வரிசையாக அமர வைக்கப்பட்டனர். ரயில் வந்தவுடன் யாரும், அடித்துப் பிடித்து ஏறக்கூடாது, அனைவரையும் போலீசாரே அமர வைப்பார்கள். ரயில் வந்தவுடன் வரிசையாக ஏற வேண்டும் என்று போலீசார் மைக் மூலம் அறிவுறுத்தினர். 

 

சார்ந்த செய்திகள்