Skip to main content

சட்டக்கல்லூரி இடமாற்றம்! - மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Published on 27/02/2018 | Edited on 27/02/2018
law clg pro.jpg


உயர்நீதிமன்றத்தில் இருக்கும் சட்டகல்லூரியை வருகின்ற மே மாதத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டதிலும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் 5 வருட படிப்பு, 3 வருட படிப்பு என தனி தனியாக பிரித்து கல்லூரியை இடமாற்றம் செய்ய உள்ளனர்.

இதன் தொடர்பாக அங்கு பயிலும் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரியை இடமாற்றம்  செய்யக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து கல்லூரியிலே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த கல்லூரி மாற்றத்தி்ற்கான முக்கிய காரணம், தற்போது உள்ள கல்லூரியில் மெட்ரோ பாதை அமைக்கும் பணியின் போது விரிசல் ஏற்பட்டதாலும், கல்லூரியை சரிசெய்து தரும்படி மாணவர்கள் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்தவகையில் ஓய்வு பெற்ற நீதிபதி கொண்ட விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதில் பல்வேறு தரப்பையும் விசாரித்த விசாரணை கமிஷன் உயர்நீதிமன்றமும், சட்டக் கல்லூரியும் ஒரே இடத்தில் இருப்பதால் மாணவர்களிடையே வேறுபாட்டை உருவாக்குவதாக கருத்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இக்கல்லூரியில் பயின்ற இரு பிரிவு மாணவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதாலும், இதை தவிர்க்க சென்னைக்கு வெளியே சட்டக் கல்லூரியை அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

அந்த பரிந்துரையின் பேரில் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் கிராமத்தில் 10 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஒதுக்கப்பட்டு 57,17,8000 ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட கல்லூரி வளகாம் 2017 தொடங்கப்பட்டு வகுப்பறைகள் மாதிரி நீதிமன்றம், தேர்வு அறைகள், முதல்வர் மற்றும் பேராசிரியர் அறைகள், மாணவர் சேர்க்கை அலுவலகம், விண்ணப்பப் படிவம், கேள்வித்தாள் பாதுகாப்பு அறைகள், 1 லட்சம் புத்தகங்கள் கொண்ட சட்ட நூலகம் போன்றவை இந்த வளாகத்தில் அமைகிறது.
 

law clg pro.jpg


இந்த கல்லூரி அடுத்தாண்டு மே மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வர முடிவெடுத்து அறிக்கையை வெளியிட்டது அரசு. அதன் பேரில் தான் தற்போது கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதுகலை மாணவர் திலகராஜ் கூறுகையில், நாங்கள் கல்லூரியை சீரமைத்து தாருங்கள் என்றுதான் கேட்டோம். ஆனால் இவர்கள் கல்லூரி இடத்தையே மாற்ற உள்ளனர். ஒரு மருத்துவ கல்லூரி மாணவர்கள் எப்படி அதே மருத்துமனையில் படிப்பது சிறந்தது என்பது போல நாங்களும் அப்படித்தான் இங்கு பெரிய வழக்கறிஞர்களின் உதவியை பெற்றும் நேரடியாக ஒருவிசயத்தை கற்றுக்கொள்ளமுடிகிறது. இங்கு இருப்பதை போன்று எங்களுக்கு அங்கு வசதிகள் கிடைக்காது இது ஒட்டுமொத்தமாக ஏமாற்று வேளை இது என்றார்.

காவியா முதலாம் ஆண்டு மாணவி கூறுகையில், இங்கு படிப்பதின் மூலம் எங்களுக்கென்று தனி மதிப்பீடு இருக்கிறது. இந்த கல்லூரி ஏன் இத்துனை வருடமாக இங்கு இயங்கியது அப்படி கல்லூரியை அமைத்தவர்கள் எல்லாம் முட்டாளா இல்லை இங்கு இருக்கும் பயன்களை தெரிந்துதான் உயர்நீதிமன்றத்தில் கல்லூரியை அமைத்துள்ளனர்.

இந்த இடத்தில் பயின்றால் தான் எங்களின் தரம் உயரும் இல்லையேல், ஏதோ தோலான் துரத்தி போல் நாங்களும் படித்துவிட்டு தரம்தாழ்ந்து போகும், நாளை வரும் அடுத்த தலைமுறைகளும் இந்தபயனை அடையவேண்டும். மருத்துவம் போலவே நாங்களும் படிப்பதுதான் சாத்தியமாகும். ஆகையால் கல்லூரி உயர் நீதிமன்றதின் உள்ளே அமைத்துதரவேண்டும் என்று நாங்கள் போராட்டத்தில் நிற்கிறோம்.

இதற்கான முடிவை இந்த அரசு மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் இந்த உள்ளிருப்பு போராட்டம் தொடரும். அதுமட்டுமில்லாமல் முன்னால் மாணவர்களையும் அழைத்து நாங்கள் இந்த போராட்டத்தை கையில் எடுப்போம் என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கலாஷேத்ராவில் பாலியல் புகார்; அடையாரில் போராட்டம்

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

complaint in central government-run Kalashetra; Agitation in Adyar

 

மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

சென்னை அடையாரில் கலாஷேத்ரா பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்து இணையத்தில் பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தை கையில் எடுத்த தேசிய மகளிர் ஆணையம், இது குறித்து டிஜிபி விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தது. விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் தேசிய மகளிர் ஆணையமே விசாரணையில் இறங்கும் எனவும் தெரிவித்திருந்தது. 

 

சென்னை அடையாரில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பேராசிரியரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் அளித்த புகாரில், தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்கள் அதுபோல் எதுவும் நடக்கவில்லை எனக் கூறியிருந்தார்.

 

மாணவி கூறியதன் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு வழங்கிய உத்தரவை வாபஸ் பெற்றது. ஆனால், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா 3 மணிநேரம் அடையாரில் உள்ள கலாஷேத்ராவில் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் முறைப்படி விசாரிக்காமல் மாணவ மாணவிகள் அனைவரையும் ஒன்றாக வைத்து விசாரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

விசாரிக்கச் சொல்லிக் கூறியதை வாபஸ் பெற்ற தேசிய மகளிர் ஆணையம், பின் அதை வாபஸ் பெற்று மீண்டும் ரகசியமாக வந்து 3 மணிநேரம் விசாரித்துவிட்டுச் சென்றது மாணவிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கலாஷேத்ரா நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்காத காரணத்தாலும் தேசிய மகளிர் ஆணையமும் முறையாக நடவடிக்கை எடுக்காத காரணத்தாலும்  கலாஷேத்ராவில் பயிலும் மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர். பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

Next Story

‘‘அனைத்து மாவட்டத்திலும் சட்டக்கல்லூரி என்பதே முதல்வரின் நோக்கம்..” - அமைச்சர் ரகுபதி 

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

"The chief minister's aim is to have a law college in every district." - Minister Raghupathi

 

திண்டுக்கல்லில் உள்ள ஜி.டி.என். கலைக் கல்லூரியில், சட்டக் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் துறை அமைச்சர் ரகுபதி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சட்டக் கல்லூரியைத் திறந்து வைத்தனர். அவர்களை ஜி.டி.என். கல்லூரி தலைவர் ரத்தினம், புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவரும் அறங்காவலருமான ராமச்சந்திரன் மற்றும் ஜி.டி.என் கல்லூரி நிர்வாக இயக்குநர் துரை ஆகியோர் வரவேற்றனர்.

 

இதில் பேசிய அமைச்சர் ரகுபதி, “கடந்த அதிமுக ஆட்சியில் தனியார் சட்டக் கல்லூரி தொடங்குவதற்கு கடந்த இரண்டு வருடங்களாகவே அனுமதி கொடுக்கவில்லை. நமது தலைவர் முதல்வராகப் பொறுப்பேற்ற உடனே, முறையாக இந்திய பார் கவுன்சிலில் அனுமதி பெற்று அதற்கான வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தார். அதில் முதன் முதலில் இந்த ஜி.டி.என் சட்டக் கல்லூரிக்கு முதல்வர் அனுமதி கொடுத்திருக்கிறார். இது போல் மேலும் ஏழு சட்டக் கல்லூரிகள் துவங்கப்பட இருக்கிறது. தற்பொழுது சட்டக் கல்லூரியில் மாணவ மாணவிகள் அதிகமாக விரும்பிச் சேர்ந்து படிக்கிறார்கள்.

 

சென்னை சட்டக் கல்லூரியில் மட்டும் 700 பேர் படிக்கிறார்கள். சட்டக் கல்லூரியில் படித்தால் எந்தத் துறைக்கும் போகலாம். அதுபோல் மற்ற படிப்புக்கும் சட்டப் படிப்புக்கும் வித்தியாசம் இருக்கு. சட்டக் கல்லூரியில் படிக்கக் கூடிய மூன்று பேர் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள் என்றால் அவர்களில் ஒருவர் நீதிபதியாகவோ வழக்கறிஞராகவோ இருப்பார்கள். அதன் மூலம் வழக்குக்கு தீர்வு கிடைக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டக் கல்லூரி கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் செயல்பட்டு வருகிறார். எனக்கு முன்பு பேசிய ரத்தினம், ராமச்சந்திரன் சொன்னது போல் ஒரு வீட்டுக்கு ஒரு சட்டம் படித்தவர் வர வேண்டும்” என்று கூறினார்.