Skip to main content

கராத்தே தியாகராஜன் பா.ஜ.க.வில் இணைந்தார்! (படங்கள்)

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

 

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் பா.ஜ.க.வில் இணைந்தார். 

 

சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க.வின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில், கராத்தே தியாகராஜன் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். இதையடுத்து, கராத்தே தியாகராஜனுக்கு சால்வை அணிவித்து சி.டி.ரவி வரவேற்க, கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கினார் எல்.முருகன். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் நிர்வாகிகளான முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் ராதாரவி, கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்