Skip to main content

கமல் பேச இருந்த மேடையில் எல்இடி திரை சரிந்தது

Published on 21/02/2018 | Edited on 21/02/2018
The LED screen  The LED screen collapsed, Kamal, Madurai Public meeting



நடிகர் கமல்ஹாசன் இன்று மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்ய உள்ளார். இதற்காக ஒத்தக்கடை மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் பேர் அமருவதற்கான நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலிருந்தும் அவரது ரசிகர்கள் வர உள்ளனர். காலையில் ராமேஸ்வரத்தில் தனது பணத்தை துவங்கிய கமல் மாலையில் மதுரை ஒத்தகடை மைதானத்தில் பேச உள்ளார். இதற்காக பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் தீவிரப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த எல்இடி திரை சரிந்து விழுந்தது. காற்றின் வேகத்தில் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதனை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைப்பெற்றது. 
 

சார்ந்த செய்திகள்