Skip to main content

அமலாக்கத்துறை விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை!

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
The High Court prohibits the investigation of the enforcement department

சென்னையில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனமான ஓஷன் லைஃப் ஸ்பேஷஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். மேலும் சுமார் ரூ. 50 கோடி வரை பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘இருவருக்கும் இடையேயான தொழில் பிரச்சனையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு. எனவே தங்கள் நிறுவனத்தின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தரமோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (19.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டுமான நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் தடை விதித்ததுடன், இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்