Skip to main content

சேலம் தென்னை மரங்களுக்கு  50 ஆயிரம், கஜா தென்னை மரங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாயா? ஜி.கே.வாசன் கேள்வி

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
va

  

 கீரமங்கலம் பகுதியில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் பா.ஜ.க எச்.ராஜா, நாம்தமிழர் கட்சி சீமான், த.மா.கா ஜி.கே.வாசன் ஆகிய அரசியல் கட்சித் தலைவர்கள் பார்வையிட்டனர். 

 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்கள் கஜா புயலில் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மினசார வாரியம் மட்டும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் மற்ற துறை சார்ந்த மீட்புக்குழுவினர் கிராமங்களுக்குள் வரவில்லை. அதனால் அந்தந்த கிராம இளைஞர்களே மரங்களை வெட்டி அகற்றி மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பல கிராமங்களில் சாலைப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால் பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 


    இந்த நிலையில் கீரமங்கலம் பகுதிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வந்து பாதிக்கப்பட்ட கிராமங்களை பார்வையிட்டு நிவாரணத் தொகைளை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர்.


    
    கீரமங்கலம், செரியலூர், பனங்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்ட த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசும் போது.. முழுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால் மீட்புகுழு மற்றும் நிவாரணப்பணிகளுக்கு தமிழக அரசு அறிவித்த யாரும் கிராமங்களுக்கு செல்லவில்லை என்பது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள நிவாரணம் என்பது யானைப் பசிக்கு சோளப் பொறி கொடுப்பது போல உள்ளது. ஒரு தென்னை மரத்தை வளர்க்க எவ்வளவு ஆண்டுகள், எவ்வளவு செலவு அதைப்பற்றி கொஞ்சம் கூட நினைவில் கொள்ளாமல் குறைவான தொகையை வழங்க உள்ளது வேதனையானது. 8 வழிச்சாலையில் பாதிக்கப்படும் ஒரு தென்னை மரத்துக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ள அரசு,  புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்துக்கு ரூ. ஆயிரத்தி நூறு வழங்குவது எந்த விதத்தில் நியாயமானது? அதனால் தமிழக அரசு உடனடியான கணக்கெடுப்புகளை முறையாக செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அதிகமான இழப்பீடு வழங்க வேண்டும்.


    மத்திய அரசு உள்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்