Skip to main content

ஈரோட்டில் அண்ணா சிலைக்கு மலர் மரியாதை...!

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

Erode anna statue homage

 

திராவிட இயக்க முன்னோடி தலைவர், முன்னாள் முதல்வர் அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுக்க கொண்டாடப்பட்டது. அவரது சிலைக்கும், படங்களுக்கும் அரசியல் கட்சியினர் முதல் பல்வேறு அமைப்பினர்கள் வரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

அண்ணாவின் அரசியல் பாசறையும் பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டிலும் பல்வேறு அரசியல் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் பி.சி ராமசாமி தலைமையில் முன்னாள் துணைமேயர் கே.சி பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஸ் கேசவமூர்த்தி ஜெயராஜ் கோவிந்தராஜ் தங்கமுத்து உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர். 

 

அதே போல் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், பொருளாளர் பி கே பழனிச்சாமி, மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ. பிரகாஷ், உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.  

 

Ad

 

ம.தி.மு.க சார்பில் ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் தங்கராஜ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் செல்வராஜ், தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில் அதன் தலைவர் நாகை திருவள்ளுவன், மற்றும் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட அமைப்புச் செயலாளர் சண்முகம் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் பெரியார், அண்ணா நினைவகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்