Skip to main content

தீபாவளியில் பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு!

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

கடந்தாண்டை போல் இந்த ஆண்டும் தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு. தமிழகத்தின் தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. அதன்படி காலை 06.00 மணி முதல் 07.00 வரையும், மாலை 07.00 மணி முதல் 08.00 மணி வரை மட்டுமே பட்டாசுக்கள் வெடிக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. 

DIWALI FESTIVAL CRACKERS TAMILNADU GOVERNMENT TIME ANNOUNCED


மேலும் மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம், புனித தலங்கள், குடிசைப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. மாசில்லா தீபாவளியை கொண்டாட ஏதுவாக வெடிவெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்