Skip to main content

தர்மபுரி அருகே போதை பொருள் கடத்தி வந்த சரக்கு வாகனம் பறிமுதல்; ஓட்டுநர் கைது!

Published on 02/02/2020 | Edited on 02/02/2020

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக பான் பராக், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தி வரப்படுவதாக தர்மபுரி மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. 

dharmapuri road van illegal products driver arrested seized products

இதையடுத்து, கிருஷ்ணாபுரம் சிறப்பு எஸ்ஐ நரசிம்மன் மற்றும் காவலர்கள் ஜன. 31ம் தேதி இரவு, தடங்கம் மேம்பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அந்த வழியாக சென்ற ஒரு டெம்போ வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில், அதில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, பான் பராக், ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. வாகனத்தில் மொத்தம் 46 மூட்டைகளில் போதை பொருள்கள் இருந்தன. ஒவ்வொரு மூட்டையிலும் தலா 100 பொட்டலங்கள் இருந்தன. 


இதுகுறித்து சிறப்பு எஸ்ஐ நரசிம்மன் தர்மபுரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். ஆய்வாளர் ரத்தினகுமார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, போதைப் பொருள்கள் கொண்ட வாகன ஓட்டுநரான திருவண்ணாமலையைச் சேர்ந்த புருஷோத்தமன் (25) என்பவரை கைது செய்தார். அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூருவில் இருந்து அந்த வாகனத்தில் போதை பொருள்களை கடத்தி வந்திருப்பதும் தெரிய வந்தது.


 

சார்ந்த செய்திகள்