Skip to main content

தமிழக மாணவர்களிடம் சிபிஎஸ்இ மன்னிப்பு கேட்கவேண்டும் - முக.ஸ்டாலின்

Published on 07/05/2018 | Edited on 07/05/2018

கொளத்தூரில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசுகையில், தமிழக மாணவர்கள் காப்பி அடிப்பதில் தீவிரமாக உள்ளனர் என்பதுபோன்ற நோக்கில் சோதனை என்ற பெயரில் மாணவர்களுக்கு மனஉளைச்சளையும் அவமதிப்பையும் ஏற்படுத்தும்படி நடந்துகொண்ட சிபிஎஸ்இ நிர்வாகம் தமிழக மாணவர்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும். 

 

stalin

 

 

சோதனை என்ற பெயரில் மாணவர்களுக்கு நடந்த அந்த கொடுமையை கண்டு பெற்றோர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களும் இரத்த கண்ணீர் வடித்தனர். எனவே சிபிஎஸ்இ நிர்வாகம் தமிழக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்பதோடு மட்டுமல்லாமல் இந்த சோதனை முறைகளையும் திருத்திக்கொள்ள வேண்டும்.

 

சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து சிறை தண்டனை பெற்ற ஒருவருக்கு மணிமண்டபம் கட்டுவதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் எனவும் கூறினார்.

சார்ந்த செய்திகள்