Skip to main content

வாய்ப்பிருந்தால் தமிழக பாஜக தலைமை ஏற்க தயார்-எஸ்.வி.சேகர்

Published on 23/09/2018 | Edited on 23/09/2018

 

svs

 

இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி சேகர் வாய்ப்பிருந்தால் தமிழக பாஜக தலைமை ஏற்க தயார் என தெரிவித்துள்ளார்.

 

 

இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி சேகர் கூறுகையில்,

 

நான் பாஜகவிற்கு வந்தது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடிக்காகத்தான் அதனால் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. சென்ற முறைகூட நான் வாரணாசிக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். பெங்களூரில் பி.சி.மோகன், ஆனந்தகுமார் ஆகியோர் பிரச்சாரத்திற்கு அழைத்தார்கள் சென்று பிரச்சாரம் செய்தேன். ஆனால் இந்த தலைமை என்னை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்னை பயன்படுத்தி கொண்டால் அவர்களுக்கு நல்லது அப்படி பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. 

 

எனக்கு தமிழக பாஜக தலைமை ஏற்பதற்கான சூழ்நிலை மாற்றும் வாய்ப்பு கொடுக்கப்பட்டால்  கண்டிப்பாக ஏற்றுக்கொண்டு இப்போது  இருப்பதை விட அதிக சதவிகித ஓட்டை வாங்கி காட்ட முடியும். 

 

நீதிமன்றத்தை அவதூறாக பேசினார் என்று எச்.ராஜா மீது வழக்கு போட்டுள்ளனர். அந்த வழக்கை எதிர்கொண்டு அவர் பேசினாரா இல்லையா என ராஜா நிருபிப்பார். தமிழகத்தில் யாரையாவது கைது செய்தால் உடனே எஸ்.வி சேகரை ஏன் கைது செய்யவில்லை, எச்.ராஜாவை ஏன்  கைது செய்யவில்லை என்கூறுகிறீர்கள்  சைக்கிள்ல டபுள்ஸ் போறதுக்கு கொலை செய்வதற்கும் வித்தியாசம் இருக்கு எனவே எல்லாத்தையும் ஒரே மாதிரி பார்க்க முடியாது. சட்டத்தில் பல நிலைகள் இருக்கு கொலை முயற்சி, கொலை செய்வது, திருடுவது என, எல்லாத்திற்கு ஒரே தண்டனை இல்லை. எந்த செக்சனுக்கு என்ன ஆக்ஷ்ன் எடுக்க வேண்டும் என்று சட்டத்திற்கு தெரியும் என்றார்.   

சார்ந்த செய்திகள்