Skip to main content

125 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்போம்! - எடியூரப்பா உறுதி

Published on 13/05/2018 | Edited on 13/05/2018

கர்நாடக சட்டசபைத் தேர்தல் மிகப்பெரும்பான்மையாக வெற்றிபெற்று பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

yeddy

 

 

 

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் நேற்று நடந்துமுடிந்தது. இந்தத் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் மாறுபட்ட தகவல்கள் கிடைத்தன. 

 

இந்நிலையில், இன்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா, நான் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளைப் பார்த்தேன். பா.ஜ.க. 125 - 130 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றிபெறும். காங்கிரஸால் 70 தொகுதிகள் மற்றும் மதச்சார்பற்றா ஜனதா தளம் கட்சியால் 25 தொகுதிகளுக்கும் மேல் பெறமுடியாது. கர்நாடகாவில் வலிமையான பா.ஜ.க. அலைவீசுகிறது. பொதுமக்கள் சித்தாரமையா மற்றும் காங்கிரஸ் மீதிருக்கும் கோபத்தைத் தேர்தலில் காட்டியிருக்கிறார்கள். வரும் செவ்வாய்க்கிழமை முடிவு வரும்போது இது எல்லோருக்கும் தெரியவரும். பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடிக்கும். கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் விரட்டியடிக்கப்படும்’ என பேசியிருந்தார்.

 

நேற்று கர்நாடக மாநிலத்தில் 222 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 71 சதவீதம் வாக்கு பதிவானது. இந்தத் தேர்தலுக்கான முடிவு வரும் மே 15ஆம் தேதி வெளியிடப்படும்.   

 

 

 

சார்ந்த செய்திகள்