Skip to main content

வெளியேறிய தங்க தமிழ்ச்செல்வன்! தினகரனுக்கும், அமமுகவிற்கும் இன்ப அதிர்ச்சி!

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

சமீப காலமாக தினகரன், தங்க தமிழ்செல்வனின் மோதல் போக்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரனை தங்க தமிழ்ச்செல்வன் திட்டுவது போல ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து இனிமேல் தினகரனின் அமமுக கட்சியில் இருக்கப்போவதில்லை என்று அறிவித்தார். மேலும் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தங்க தமிழ்ச்செல்வன் சந்தித்து திமுகவில் இணைத்து கொண்டதாக செய்திகள் வெளியானது. 
 

ammk



மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் சுயேட்சையாக போட்டியிட்டனர். இதனையடுத்து மக்களவை தேர்தல் முடிந்தவுடன் அ.ம.மு.கவை கட்சியாக பதிவு செய்யவேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திடம் தினகரன் விண்ணப்பித்திருந்தார்.   இந்தநிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தினகரனின் கட்சியை, அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான பொது அறிவிப்பு இன்று வெளியானது. தினகரன் கட்சியிலிருந்து செந்தில்பாலாஜி,தங்க தமிழ்செல்வன், மேலும் பல நிர்வாகிகள் அமமுகவை விட்டு வெளியே சென்ற போதும் அமமுகவை கட்சியாக அதிகார்வப்பூர்வமாக பதிவு செய்ததை அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியாக பார்த்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்