Skip to main content

ரஜினிக்கு சென்ற சர்வே ரிப்போர்ட்... அரசியல் குறித்து எடுத்த திடீர் முடிவு... நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு!

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் ரஜினி மக்கள் மன்ற  நிர்வாகிகள் மற்றும் ஊடகத்தைச் சந்தித்த ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் கட்சிக்கு மட்டுமே நான் தலைமை ஏற்பேன். முதல்வர் பதவியை நான் ஏற்கமாட்டேன். என்னை வருங்கால முதல்வர்... வருங்கால முதல்வர்  என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சி வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் அப்படி மக்களிடம் மாற்றத்துடன் கூடிய எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன் என்றார்.

 

rajini



இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தான் அறிவித்த கருத்துக்குப் பெண்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஆதரவு எப்படி உள்ளது என்று ரஜினி ஒரு சர்வே எடுக்கத் திட்டமிட்டார். அதற்கு ஒரு தனிக்குழுவை அனுப்பி மக்களிடையே தனது கருத்துக்கு ஆதரவு எந்தளவு உள்ளது என்று கருத்துக் கேட்டு வாருங்கள் என்று அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. தற்போது அந்தக் குழு கொடுத்த சர்வே முடிவைப் பார்த்து ரஜினி மகிழ்ச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த சர்வே முடிவில் ரஜினியின் கருத்துக்குப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு ரஜினியின் கருத்து கிராமப்புற பகுதிகளில் ரஜினியின் மூன்று அம்ச திட்டத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் அந்தக் குழு கொடுத்த சர்வே ரிப்போர்ட்டில் மிகக் குறைந்த சதவிகிதத்தனர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு அந்தக் குழு கருத்துக்கணிப்பை வீடியோவாக ரஜினியிடம் கொடுத்துள்ளதாகச் சொல்கின்றனர். இதனால் ரஜினி மிகுந்த உற்சாகத்தில் கட்சி பெயரை சீக்கிரமாக அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சர்வே முடிவால் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் உற்சாகத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.  

 

சார்ந்த செய்திகள்