Skip to main content

கூட்டணி பற்றி பிரசாந்த் கிஷோர் போட்ட திட்டம்... ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு... அதிருப்தியில் திமுக சீனியர்கள்! 

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

தமிழகம்  உட்பட 17 மாநிலத்தில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான  தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 6 பேரின்  மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2 ஆம் தேதி உடன் முடிவடைகிறது. திமுக மற்றும் அதிமுகவில் தலா 3 ராஜ்யசபா சீட்டுகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. திமுகவை பொறுத்தவரை மூன்று ராஜ்யசபா சீட்டுகளையும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்காமல் திமுகவினரே எடுத்து கொள்ளும் முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் கட்சியில் இருக்கும் சீனியர்கள் ராஜ்யசபா சீட் பெற வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

 

dmk



இந்த நிலையில் வரும் சட்ட மன்ற தேர்தலில் கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக போட்டியிட்டது போல் திமுக 234 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தலாமா வேண்டாமா என்ற ஆலோசனையில் இருப்பதாக சொல்கின்றனர். மேலும் திமுகவோடு இணைந்து பணியாற்றும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தமிழகத்தில் திமுக தனித்து போட்டியிட்டாலே வெற்றி பெற முடியும் என்று திமுக தலைமையிடம் கூறியதாக சொல்கின்றனர். ஆனால் திமுகவில் இருக்கும் சீனியர்கள் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு இல்லாமல், வருகிற சட்ட மன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றும் ஸ்டாலினிடம் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூறியுள்ளதாக தகவல் வெளிவருகிறது. அதோடு வரும் சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் திமுக தலைமை நினைத்து வருவதாக சொல்கின்றனர். இந்த முறை சட்டமன்ற தேர்தலின் போது குற்றப்பின்னணி இல்லாதவர்களுக்கு அதிகளவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமை நினைப்பதால் பிரசாந்த் கிஷோர் டீம் தொகுதி வாரியாக களத்தில் ஆய்வு நடத்தி வருவதாகவும் சொல்கின்றனர். 


இதுமட்டும்மில்லாமல் வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினி கட்சி ஆரம்பித்து புதிய கூட்டணியை உருவாக்க முயற்சி செய்ய வாய்ப்பு இருப்பதால் அதனை சமாளிக்க திமுக வலுவான கூட்டணியோடு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று திமுக சீனியர்களும் கூட்டணி கட்சிகளும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதனால் 234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்ற பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையை திமுக தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் சொல்கின்றனர்.     

 

 

சார்ந்த செய்திகள்