Skip to main content

நான் ஜெயிலில் இருப்பது அதிமுகவிற்கு நல்லது... புதிய வழக்கை எடுக்கும் பாஜக... அதிருப்தியில் சசிகலா தரப்பு!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

சசிகலா ரிலீஸ் ஆனதும் அ.தி.மு.க. அரசியல் வேகம் எடுக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். சசிகலாவோட தண்டனைக் காலம் விரைவில் முடிய இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் கட்ட வேண்டிய அபராதத் தொகை 10 கோடி ரூபாயை கட்டாவிட்டால், மேலும் 6 மாத காலம் அவர் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படக்கூடும் என்கின்றனர். சசிகலா தரப்போ அபராதம் கட்ட வேண்டாம் என்று  குடும்பத்தாரிடம் சொல்லியிருப்பதாக கூறுகின்றனர். 
 

admk



இப்போதைய சூழ்நிலையில் சிறையில் இருப்பதையே பாதுகாப்பாக சசிகலா நினைப்பதாக சொல்லப்படுகிறது. விடுதலையானாலும், அமலாக்கப்பிரிவின் வழக்கு உட்பட ஏதாவது காரணம் கூறி திரும்பவும் ஜெயிலில் அடைக்க மோடி அரசு நினைக்கும் என்று சசிகலா தரப்பு கருதுவதாக கூறுகின்றனர்.1989-ல் ஏற்பட்ட கார் விபத்தில் பாதிக்கப்பட்டு 18 தையல்கள் போடப் பட்ட அவரது கண்களில் இருந்து எப்போதும் நீர் வடிந்தபடியே இருப்பதும் அவரை மிகவும் சோர்வடைய செய்வதாக தெரிவிக்கின்றனர். அதோடு, அ.தி.மு.க. நிலவரமும் கலவரமாக இருப்பதால் விடுதலையைத் தவிர்க்கும் விரக்தி மனநிலையில் சசிகலா தரப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்