Skip to main content

ரூ.15 லட்சம் எங்கே? என் கண்ணை பார்த்து பேசுவதை பிரதமர் தவிர்க்கிறார்: ராகுல் காந்தி பேச்சு

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
Rahul Gandhi

மத்திய பாஜக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி இன்று கொண்டு வந்தது. இதற்கான வாக்கெடுப்பு மாலையில் நடைபெற உள்ளது. முன்னதாக விவாதம் நடந்தது. 
 

 

 

இதில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது. ரூபாய் 15 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆனது. பிரதமர் என்னை பார்ப்பதை தவிர்க்கிறார். அவர் என் கண்ணை பார்த்து பேச வேண்டும். என்னை பார்த்து பேசுவதை தவிர்க்கிறார். பிரதமர் மக்களுக்காக உழைக்கவில்லை. சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார். பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது. 
 

 

 

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களை பாதுகாக்க முடியவில்லை என்று மற்ற நாடுகள் நினைக்கிறது. சிறுபான்மையினர், தலித்துகள் தாக்கப்பட்டால் பிரதமர் அமைதியாக இருக்கிறார். சிறுபான்மையினரும், தலித்துகளும் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா. இந்தியாவின் அனைத்து குரல்களையும் இந்த அரசு நசுக்கப் பார்க்கிறது.  ஆட்சியை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் இருக்கிறது. இவர்கள் இருவரும் வித்தியாசமான அரசியல்வாதிகள் என்றார். 
 


 

சார்ந்த செய்திகள்