Skip to main content

நெட் பேக்கை தீர்த்ததால் கோபத்தில் தம்பியைக் குத்திக்கொன்ற அண்ணன்!!!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

rajasthan boy stbbed on quarrel with brother

 

தனது தம்பி செல்போனின் டேட்டா பேக்கை தீர்த்ததால் ஆத்திரமடைந்த அண்ணன் தம்பியைக் கொன்ற சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. 

 

ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் வசித்துவந்த ராய் என்பவர் கடந்த புதன்கிழமை தனது அண்ணன் ராமன் (23) என்பவரின் செல்போனை பயன்படுத்தியுள்ளார். பின்னர் அதனைத் தனது அண்ணனிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். அதன்பிறகு செல்போனில் இணைய வசதியைப் பயன்படுத்த முயன்ற ராமன் செல்போனில் நெட் பேக் இல்லாததைக் கண்டு கோபமடைந்துள்ளார். இதனையடுத்து, தனது தம்பி ராயை வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று, அவரைத் திட்டியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட, ராயை நெஞ்சுப்பகுதியில் நான்கு அல்லது ஐந்து முறை கத்தியால் குத்திவிட்டு ராமன் அங்கிருந்து தப்பிவிட்டார்.

 

இச்சம்பவம் வீட்டில் உள்ளவர்களுக்குத் தாமதமாகவே தெரியவந்த சூழலில், அவர்கள் வீட்டின் மாடியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ராயை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் கொண்டுவரும் வழியிலேயே ராய் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது தம்பியைக் குத்திய பின்னர் தப்பி ஓடிய ராமன் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்