Skip to main content

52 நாட்களுக்கு பின் வெளியே வந்த சந்திரபாபு நாயுடு

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

nn

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது திறன் மேம்பாட்டுக் கழகத்தில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு  09/09/2023 அன்று கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கட்சித் தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆந்திராவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

 

தொடர்ந்து அவரது உடல்நிலை உள்ளிட்ட மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுமீது நடந்த விசாரணையில் ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் ராஜமுந்திரி சிறையில் இருந்து 52 நாட்களுக்கு பிறகு முன்னாள் முதல்வர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியே வந்துள்ளார். சிறைக்கு முன்பு கூடியுள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் சந்திரபாபு நாயுடு பேசி வருகிறார். அதேபோல் சிறையில் இருந்து வெளியே வரும் அவரை, அவருடைய கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வரவேற்று வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்