Skip to main content

விபரீத முடிவெடுத்த தம்பதி; 3 குழந்தைகளுக்கு நிகழ்ந்த சோகம்

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

kerala kannur district family incident with three child

 

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள செருபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 38). இவருக்கு திருமணமாகி இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த ஷாஜி (வயது 40) என்பவர் திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் ஸ்ரீஜாவுக்கும் ஷாஜிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதையடுத்து ஸ்ரீஜாவும் ஷாஜியும் தங்கள் வாழ்க்கை துணையிடம் இருந்து முறைப்படியாக விவாகரத்து பெறாமல் கடந்த 16 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

 

இந்நிலையில் ஷாஜியின் வீட்டுக் கதவு நேற்று காலையில் இருந்து நீண்ட நேரம் திறக்கப்படாமலேயே இருந்துள்ளது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஷாஜி, அவரது மனைவி ஸ்ரீஜா இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், மூன்று குழந்தைகளும் இறந்த நிலையிலும் கிடந்துள்ளனர். மூன்று குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு ஸ்ரீஜா, ஷாஜி இருவரும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நேற்று காலை காவல் நிலையத்திற்கு ஸ்ரீஜா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்