Skip to main content

ஆட்சியை கலைக்க முதல்வர் குமாரசாமி முடிவு?

Published on 10/07/2019 | Edited on 11/07/2019

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ராஜினாமா கடிதம் அளித்த எம்.எல்.ஏக்களிடம் சமாதானம் பேசியும், அவர்கள் ராஜினாமாவில் உறுதியாக உள்ளன. இந்நிலையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்ததால் உடனடியாக பதவி விலக வேண்டும் என அம்மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது.

 

 

 

KARNATAKA CM HD KUMARASAMY INVITE CABINET MEETING, GOVERNMENT DISSOLVE DECIDE

 

 

 

இருப்பினும் ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தொடர் ராஜினாமாவால், கர்நாடக முதல்வர் குமாரசாமி அவசர அமைச்சரை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் இன்று (11/07/2019) காலை 11.00 மணியளவில் பெங்களூரில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது. இந்த கூட்டத்தில் ஆட்சியை கலைக்கும் முடிவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதலை பெற்று, ஆளுநரை சந்தித்து ஆட்சியை கலைக்கப்பட்டதற்கான கடிதத்தை முதல்வர் குமாரசாமி வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்