Skip to main content

ஆறு மாதம் பெண்களின் துணிகளைத் துவைக்க இளைஞருக்கு உத்தரவிட்ட நீதிபதி!!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

fg

 

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞருக்குப் பெண்களின் துணிகளைத் துவைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் சில வாரங்களுக்கு முன்பு தனது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண் தனியார் இருப்பதைப் பார்த்துள்ளார். அவரிடம்  பேசுவதைப் போல் சென்ற அவர், சிறிது நேரத்தில் அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். 

 

இளம்பெண்ணின் கூச்சல் சத்தம் தெருவில் எதிரொலிக்கவே அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து அந்த இளைஞரைத் தாக்கி இளம்பெண்ணை மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் மனுத்தாக்கல் செய்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறுமாதங்கள் அந்த மாவட்டத்தில் உள்ள பெண்களின் துணிகளைத் துவைக்க வேண்டும் என உத்தரவிட்டு அவருக்கு ஜாமீன் வழங்கினார். இந்த தீர்ப்பு அம்மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்