Skip to main content

வரதட்சணை கேட்டு மனைவியின் விரலை வெட்டிய ராணுவ வீரர்!

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 

husband and wife incident police investigation

 

வரதட்சணை கேட்டு ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியின் விரலை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் பகுதியில் பணிபுரிந்து வரும் ராணுவ வீரர் கடந்த எட்டு ஆண்டுகளாக தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், இது தொடர்பாக தனது மனைவியின் விரலை வெட்டியுள்ளார். 

 

இது குறித்து ராணுவ வீரரின் மனைவி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், ராணுவ வீரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி, பெண்ணின் பெற்றோர் குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.   

 

சார்ந்த செய்திகள்