Skip to main content

'குழாய் மூலம் இயற்கை எரிவாயு'- நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

Kochi-Mangaluru natural gas pipeline pm naredra modi

 

குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

 

ஒரே நாடு, ஒரே எரிவாயு கட்டமைப்பு திட்டத்தின் கீழ், ரூபாய் 3,000 கோடி மதிப்பில் கொச்சி - மங்களூரு இடையே சுமார் 450 கி.மீ. வரையிலான குழாய் வழியாக இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

 

இந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை, நாடளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா, கேரளா மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், கர்நாடகா மாநில ஆளுநர் வஜூபாய் வாலா உள்ளிட்டோர் காணொளி வாயிலாக கலந்துகொண்டனர். 

 

12 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு, கொச்சியில் உள்ள எல்என்ஜி நிறுவனத்திலிருந்து கர்நாடகாவில் உள்ள மங்களூருக்கு எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களைக் கடந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்