Skip to main content

பரிசோதனைகளைக் குறைக்கவேண்டாம்... மத்திய அரசு அறிவுறுத்தல்!

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

Do not reduce the experiments ... Federal Government instruction!

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில், 2 லட்சத்து 38 ஆயிரத்து 18 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 310 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 421 பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

 

இதற்கிடையே இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 8,891 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

 

இந்தநிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் ஒன்றை கொடுத்துள்ளது. கரோனா பரிசோதனைகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டாம். பல மாநிலங்கள் கரோனா பரிசோதனைகளை குறைந்துள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதால் பரிசோதனை என்பது அவசியமானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்