Skip to main content

குடியரசுத்தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

The budget session begins today with a speech by the President!

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (31/01/2022) காலை 11.00 மணிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். 

 

அதைத் தொடர்ந்து, நாளை (01/02/2022) காலை 11.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த முறை காகித பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் நிகழ்வுகளை நேரலையில் காணும் வகையில் பிரத்யேக இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 

 

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், சலுகைத் திட்டங்கள், மாநிலத்தின் அடிப்படை கட்டமைப்புகள் உள்ளிட்டவை இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

பிப்ரவர் 2-ஆம் தேதி முதல் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது. இதனிடையே, பெகாசஸ், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

 

கரோனா சூழல் காரணமாக, மாநிலங்களவை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரையும், மக்களவை மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரையிலும் செயல்பட உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“ஹரியானா அரசின் முன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்று கேட்க முடியும்” - ஆம் ஆத்மி அமைச்சர்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
 pleads the Delhi minister to Haryana government

தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. 

மேலும், ஹரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டதால், டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இன்னும், சில பகுதிகளில் வாழும் மக்கள் டேங்கர் லாரியை நோக்கி முண்டியடித்துக் கொண்டு தண்ணீரைப் பிடிப்பதற்காக காலி குடங்களுடன் செல்லும் காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனிடையே தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும் டெல்லி நீர்வளத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

சில தினங்களுக்கு டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவ வேண்டும் என உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசு முதல்வர்களுக்கு டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியிருந்தார். மேலும், உ.பி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் டெல்லிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைக் கண்டித்து அம்மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி இன்று (17-06-24) வசிராபாத் தடுப்பணையை ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “வசிராபாத் அணையில் இருந்து தண்ணீர் பல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. வசிராபாத் அணைக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இப்போது ஆற்றுப் படுகை தெரியும் அளவுக்கு நீர்மட்டம் குறைந்துவிட்டது. டெல்லி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையைத் தீர்க்க ஹரியானா அரசிடம் நாம் முறையிட மட்டுமே செய்யலாம். 

ஹரியானா மாநிலம் யமுனையில் இருந்து தண்ணீர் விடாத வரை, டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடரும். முனாக் கால்வாயில் மிகக் குறைந்த அளவு தண்ணீர் வருகிறது. மறுபுறம், வசிராபாத் அணைக்கு தண்ணீர் வரவில்லை. ஹரியானா அரசின் முன் கைகளை கட்டிக்கொண்டு நின்று டெல்லி மக்களின் உயிர் அவர்களின் கையில் உள்ளது என்று என்னால் கூற முடியும்” என்று கூறினார். 

Next Story

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராகக் கனிமொழி எம்.பி. நியமனம்!

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Kanimozhi MP Appointment as DMK Parliamentary Committee Leader

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றுள்ளது. புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.

இதனையடுத்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடந்த 6 ஆம் தேதி (06.06.2024) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 8 ஆம் தேதி (08-06-2024) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 

Kanimozhi MP Appointment as DMK Parliamentary Committee Leader

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து திமுகவின நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவைக் குழுத் தலைவராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பியும், மக்களைவைக் குழுத் துணைத் தலைவராக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், எம்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களைவை கொறடாவாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், திமுக மாநிலங்களவைக்குழுத் தலைவராக திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி.யும், மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம்,எம்.பி.யும், மாநிலங்களவை கொறடாவாக  திமுக தலைமைக் சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், எம்.பி.யும், இரு அவைகளின் பொருளாளராக கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ். ஜெகத்ரட்சகன், எம்.பி.யும் நியமிக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.