Skip to main content

தேர்தல் கணக்கிற்காக போடப்பட்டுள்ள வழக்கு- ரஃபேல் வழக்கு பற்றி மத்திய அரசு

Published on 10/10/2018 | Edited on 10/10/2018
rafael


ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் குற்றம் சாட்டினர். பின்னர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் ஒப்பந்த விவகரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

இந்நிலையில், இந்த வழக்கு அரசியல் நோக்கிலேயே போடப்பட்டுள்ளது.  ரஃபேல் ஒப்பந்தம் ராணுவம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்றும் அதை வெளிப்படையாக சொல்ல முடியாது எனவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கொள்கை சார்ந்த விசயம் என்பதனால் வழக்கறிஞர் சர்மாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசின் மீது அவதூறு பரப்பவே இவ்வாறு செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதித்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்