Skip to main content

கரோனாவுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்...

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

ayodhya ram mandir construction started


நாடு முழுவதும் கரோனா வேகமாகப் பரவிவரும் சூழலில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி முறைப்படி இன்று தொடங்கியது.


பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்த அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் ஒன்பதாம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது. மேலும், ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி கட்டுவதற்காகச் சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த சேத்ரா என்ற அறக்கட்டளையும் தொடங்கப்பட்டது. கோவில் கட்டுவதற்கான திட்டங்களை வகுத்துவந்த இந்த அறக்கட்டளை, நேற்று அயோத்தியில் உள்ள ராமஜென்மபூமியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது. காலையில், ருத்திராபிஷேக சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு, கறுப்புப் பசுவின் 11 லிட்டர் பால், சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கின. 
 

 

 

சார்ந்த செய்திகள்