Skip to main content

22 லட்சம் ரூபாய் மின்கட்டணம்; மின்வாரிய ஊழியர்களுக்கு ஸ்வீட் கொடுத்த பாட்டி

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

 22 lakh rupees electricity bill; Grandmother gave sweets to electricity board employees

 

மூதாட்டி ஒருவரின் வீட்டுக்கு 22 லட்சம் ரூபாய் மின்கட்டணம் வந்த சம்பவம் ஹரியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஹரியானா மாநிலம் பானிபட் என்ற இடத்தில் இரண்டு அறைகளை மட்டுமே கொண்ட ஒரு வீட்டில் வசித்து வந்த பாட்டிக்கு 21 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்த மூதாட்டி இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் முறையிட்டுள்ளார். இதனால் அப்பகுதி மக்களும் மூதாட்டியும் சேர்ந்து ட்ரம்ஸ் உள்ளிட்ட வாத்தியங்களுடன் இனிப்புகளை எடுத்துக் கொண்டு அந்தப் பகுதி மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்