Skip to main content

Triples-க்கு அபராதம் இல்லை - உ.பி.யில் நூதன வாக்குறுதி

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

f

 

இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்தாலும் அபராதம் விதிக்க மாட்டோம் என்று உ.பி-யில் அரசியல் கட்சித்தலைவர் ஒருவர் வாக்குறுதி கொடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தியாவில் உ.பி, கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரத்தை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. முதியவர்களுக்கு பேருந்தில் இலவச பயணம், கல்விக் கடன் தள்ளுபடி, கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அரசியல் கட்சியினர் இதுவரை வழங்கி வந்த நிலையில் தற்போது உ.பி மாநில எம்எல்ஏவும், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சித் தலைவருமான ஓ.பி. ராஜ்பார், எங்கள் ஆட்சி அமைந்தால் இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்தாலும் அபராதம் விதிக்க மாட்டோம், விட்டுவிடுவோம் என்று கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த பேச்சை கண்டித்துள்ள எதிர்க்கட்சியினர் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்