Skip to main content

"கே.எல்.ராகுல் செய்ததை என்றும் நினைவில் வைத்திருப்பேன்" - ஆஸ்திரேலிய அறிமுக வீரர் நெகிழ்ச்சி!

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

Cameron Green

 

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும், கடைசி போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றன. இதனையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வசப்படுத்தியது. 

 

இரு அணிகளுக்கும் இடையே கான்பெர்ராவில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய இளம் வீரரான கேமரூன் கிரீன் அறிமுகமானார். 27 பந்துகளை எதிர்கொண்ட கேமரூன் கிரீன், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸருடன், 21 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். போட்டியின் முடிவில் பேசிய கேமரூன் கிரீன், களத்தில் இந்திய வீரர் கே.எல்.ராகுலுடன் ஏற்பட்ட அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

 

இது குறித்து அவர் பேசுகையில், "கே.எல்.ராகுல் ஸ்டம்பிற்கு பின்புறம் நடந்து கொண்ட விதம், எனக்கு வியப்பளித்தது. நான் களமிறங்கிய போது பதட்டமாக இருக்கிறதா? என்று என்னிடம் கேட்டார். நான் 'ஆம்..கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது' என்றேன். அவர் உடனே 'சிறப்பாக விளையாடு இளம்வீரரே' என்றார். இந்திய அணியை பவுலிங்கின் போது சரியான எதிரணி என்று நினைத்தேன். அந்த நேரத்தில் விராட் கோலி மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடு இருந்தார். ஆகையால், எனக்கு கே.எல்.ராகுல் நடந்துகொண்ட விதம் வியப்பளித்தது. அதை நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன்" எனக் கூறினார்.