Skip to main content

இந்த குழந்தைக்கு எவ்ளோ பணம் தேறும்..? அடகு கடையை அதிரவிட்ட தந்தை...

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

தனது குழந்தையை அடகு கடையில் சென்று அடகு வைக்க முயன்றதாக தந்தை ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

 

american dad asks rate for his son in florida pawn shop

 

 

அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த ஸ்லோகும் என்ற நபர் தனது கைக்குழந்தையோடு  அடகு கடைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், "இவனால் எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. இவனை வைத்துக்கொண்டு எனக்கு எவ்வளவு தருவீர்கள்? என்று கேட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த கடைக்காரர் திகைத்து நின்றுள்ளார்.

இதனையடுத்து அந்த தந்தைக்கு தெரியாமல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த காவலர்கள் அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரித்த போது, விளையாட்டாக நகைச்சுவைக்காக இப்படி செய்ததாகவும், அது புரியாமல் அடகு கடைக்காரர் உங்களை அழைத்துவிட்டார் என்றும் காவலர்களிடம் அவர் கூறியுள்ளார். விசாரணைக்கு பின்னர் அவர் விளையாட்டுக்கு செய்தது  உறுதிப்படுத்தப்பட்ட பின்பு எச்சரித்து அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்