Skip to main content

கமல் பாட்டுக்கு சிம்பு நடனம்... அதிர்ந்த அரங்கம்! 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

 

 

Simbu dance to Kamal song ... Vibrant stage!

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடவுள்ளது. 

 

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள இப்பாடலில் இடம்பெற்றுள்ள “ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே சாவி இப்போ திருடன் கையிலே" என்ற வரிகள் நேரடியாக மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி கமல் மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

 

விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (15/05/2022) மாலை 06.00 PM மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர்கள்  விஜய்சேதுபது, சிம்பு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

 

அதைத் தொடர்ந்து, விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய நடிகர் சிம்பு, "திரைக்கு பின்னால் எனக்கு என் அப்பா குரு, திரைக்கு என்னுடைய குரு கமல் சார் தான். கேரளாவில் பகத் பாசில் எப்படியோ, அப்படிதான் நமக்கு விஜய் சேதுபதி" எனத் தெரிவித்தார். 

 

இதனிடையே, மேடையில் சாண்டி மாஸ்டர் சொல்ல சொல்ல 'பத்தல' பாடலுக்கு நடிகர் சிம்பு நடனமாடினார். இதனால், அரங்கில் இருந்த அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

 

சார்ந்த செய்திகள்