Skip to main content

"குற்றங்களை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்"- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்!

Published on 02/01/2022 | Edited on 02/01/2022

 

"People must cooperate to prevent crime" - District Superintendent of Police request!

 

திண்டுக்கல்லில் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், "திண்டுக்கல்லில் 2021- ஆம் ஆண்டு 46 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. ரவுடிகள், பல குற்றங்களில் தொடர்புடைய 125 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். நன்னடத்தை விதியை மீறிய 20 பேரின் பிணை ரத்து செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மது அருந்தி வாகனம் ஓட்டிய 732 பேர், ஹெல்மெட் அணியாமல் ஓட்டிய 4 லட்சத்து 61 ஆயிரத்து 128 பேர், சாலை விதிகளை மீறியதாக எட்டு லட்சத்தி 99 ஆயிரத்து எழுபத்தி எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

வாகன வழக்குகளில் 6.87 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பைத் தடுக்க ஓட்டுபவர்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 226 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து 294 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்த குட்கா புகையிலை பொருட்கள் விற்பதாக 807 வழக்குகளில் 833 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அவர்களிடம் 8 கோடிக்கு 8732 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1263 மது விலக்கு, 208 சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போன 298 பேரில் 274 பேரை உரியவருடன் சேர்த்துள்ளோம். 194 மணல் திருட்டு வழக்குகளில் 284 பேர் கைதாகியுள்ளனர். இனிவரும் நாட்களில் மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்