Skip to main content

’தி.மு.க. ஆட்சி காலத்தில் கிராமப்புற மாணவர் நலன் கருதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உருவாக்கப்பட்டது’- ஐ.பெரியசாமி

Published on 22/11/2018 | Edited on 22/11/2018
ip

 

தி.மு.க. ஆட்சி காலத்தில் கிராமப்புற மாணவர் நலன் கருதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உருவாக்கப்பட்டது என்று வீ.கூத்தம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 14.50லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து ஐ.பெரியசாமி பேசினார்.
    
கடந்த ஆறு வருடங்களாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 10கோடி குடிநீர் வசதிக்கும், பள்ளிக்கட்டிடங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இ.பெரியசாமி பெருமிதம்

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் வீரக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட வீ.கூத்தம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஐ.பெரியசாமி  தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.14.50லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. 22.11.2018 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்கு வீரக்கல் ஊராட்சி முன்னாள் தலைவரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான எம்.முத்துச்சாமி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சண்முகவேல் வரவேற்று பேசினார். உதவி தலைமையாசிரியர் ரகுபதிகுமரன் முன்னிலை வகித்தார். 

 

ip

 

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், ஆத்தூர் சட்டமன்ற தி.மு.க.உறுப்பினருமான இ.பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்துவிட்டு மாணவர்கள் மத்தியில் பேசும்போது, இன்று குக்கிராமமான வீ.கூத்தம்பட்டியில் அரசு பள்ளி சிறப்புடன் செயல்படுகிறது என்றால் திறமைவாய்ந்த ஆசிரியர்களும், மாணவர்களுக்கு சுகாதாரமான சுற்றுப்புற சூழ்நிலையும் தான் காரணம். படிப்படியாக வருடந்தோறும் மாணவர்களின் எண்ணிக்கை இப்பள்ளிக்கு அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் கடந்த ஐந்து வருடங்களாக இந்த அரசு பள்ளி 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்று கொடுத்தது தான் காரணம். 231 மாணவர்கள் படித்து வந்த இப்பள்ளியில் தற்போது 325 மாணவர்கள் படிக்கிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆசிரியர்களின் அயராத உழைப்பை காட்டுகிறது என்றார். அதனால்தான் இப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடமாக இருந்தாலும் சரி, அல்லது வேறு ஏதாவது நலத்திட்ட உதவிகளாக இருந்தாலும் சரி உடனடியாக நான் அதை கொடுத்து வருகிறேன் என்றார். கடந்த ஆறு வருடங்களாக சுமார் 10கோடிக்கு மேல் கிராம ஊராட்சிகளின் குடிநீர் தேவைக்கும், மாணவர்களின் நலன் கருதி பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

 

ip

 

தி.மு.க. ஆட்சிகாலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் திருச்சி மற்றும் மதுரைக்கு சென்று பொறியியல் கல்லூரியில் என்பதை தெரிந்து கொண்ட நான் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் பகுதியில் அண்ணா பொறியியல் கல்லூரியை கொண்டு வந்தேன். அதனால் இன்று குக்கிராமங்களில் வசிக்கும் ஏழை மாணவர்கள் கூட பொறியியல் படிப்பு படிக்கிறார்கள் என்றார். 

 

நிகழ்ச்சியில் ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.ராமன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, ஆத்தூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் காணிக்கைசாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் கலாபச்சை, கருத்தராஜா, மல்லையாபுரம் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், மாவட்ட தொண்டரனி துணை அமைப்பாளர் கும்பம்பட்டி விவேகானந்தன், வீரக்கல் ஊராட்சி கழக செயலாளர் வசந்தகுமார், வீரக்கல் ஊராட்சி துணைச் செயலாளர் சேசுராஜ், வீரக்கல் கிளைச் செயலாளர்கள் சுந்தரவேல், சரவணன் மற்றும் ஒப்பந்தகாரர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளியை சேர்ந்த மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்று தேர்வு பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுக்கு வழியாகட்டிய இருந்த ஆசிரியர்களுக்கும் தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி கேடயம் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
                    

 

சார்ந்த செய்திகள்