Skip to main content

''முகத்துல தான் வைத்திருப்பேன் தாடி... எதையுமே மறைக்க மாட்டேன் மூடி''-டி.ஆர் பேட்டி

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

TR

 

உடல்நலக்குறைவு காரணமாக உயர் சிகிச்சை பெறுவதற்காக திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று அமெரிக்கா சென்றார். இதற்கு முன்பே சென்னை உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரை தமிழக முதல்வர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

 

இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த டி.ஆர்.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''நான் உயர் சிகிச்சைக்காக இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். அதற்காக இப்பொழுதுதான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கிறேன். நான் வாழ்க்கையில எதையுமே மறைச்சதில்லை. நான் முகத்துலதான் வைத்திருப்பேன் தாடி, நான் எதையுமே மறைச்சு வைக்கமாட்டேன் மூடி. இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். அதற்காக இப்பொழுதுதான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கிறேன் ஆனால் அதற்குள்ளேயே நான் அமெரிக்கா போயிட்டேன் அங்கே போயிட்டேன் இங்கே போயிட்டேன்னு தப்பும் தவறுமா செய்திகள் வெளியாகிறது. நானே சினிமா கதையாசிரியர். வித விதமா கதை எழுதி வசனம் எழுதி, திரைக்கதை எழுதி யார் யாரோ என்ன என்னவோ பண்ணாங்க... ஆனால் இறைவனைமீறி, விதியை மீறி, கர்மாவை மீறி எதுவும் நடக்காது. நான் ஒரு சின்ன நடிகன், சாதாரண சின்ன கலைஞன், லட்சிய திமுக எனும் சின்ன கட்சியை நடத்துபவன். ஆனா என் மேல பாசம் வைத்து, பரிவு வைத்து பல பேர் செய்த பிரார்த்தனை, ஆராதனை காரணமாகத்தான் இன்று நான் இங்கு நின்னுகிட்டு இருக்கேன். எனது ரசிகர்களுக்கும், எனது மகன் சிம்பு ரசிகர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும், கட்சியை தாண்டி  எனக்காக பிரார்த்தித்த அனைவரும் எனது நன்றி'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்