Skip to main content

பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்துகள்- தொழிலாளர் நலத்துறை கொடுத்த அதிரடி உத்தரவு

Published on 10/05/2024 | Edited on 10/05/2024
Continuing accidents in firecracker factories- Action order given by Labor Welfare Department

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஸ்ரீசுதர்ஸன் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பட்டாசு ஆலைகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதற்கு முன்பாகவே தமிழகத்தில் குறிப்பாக விருதுநகர் சிவகாசி பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பட்டாசு ஆலைகளில் உரிய உரிமையைப் பெற்று செயல்படுகின்றனவா என ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் உரிய உரிமம் பெற்றுள்ளதா? தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து அடுத்த 10 நாட்களுக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்