Skip to main content

தாக்கப்பட்டாரா ப்ளூ சட்டை மாறன்...? வெளியான புகைப்படமும் விளக்கமும்

Published on 20/03/2022 | Edited on 20/03/2022

 

Blue shirt Maran attacked ...? Photo released!

 

பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அது தொடர்பான விளக்கத்தை ப்ளூ சட்டை மாறன் அளித்துள்ளார்.

 

அண்மையில் வெளியான அஜித்தின் 'வலிமை' படம் குறித்து பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் பல்வேறு விமர்சனங்களை வைத்திருந்தார். இதற்கு முன்பே அஜித்தின் திரைப்படங்கள் குறித்த ப்ளூ சட்டை மாறனின் விமர்சனங்கள் அஜித் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சமூக வலைதளங்களில் மாறனுக்கு எதிராக அவரது ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

 

Blue shirt Maran attacked ...? Photo released!

 

அஜித் படம் மட்டுமில்லாது வெளியாகும் அனைத்து படங்கள் குறித்தும் அவருக்கே உரிய பாணியில் விமர்சனம் செய்து வந்தார். இயக்குநர் பாண்டியராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்கள் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனங்கள் குறித்து பல்வேறு கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். வலிமை திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வைத்த விமர்சனங்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனால் சமூக வலைத்தளங்களில் ப்ளூ சட்டை மாறனுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதற்கிடையே ப்ளூ சட்டை மாறன் பிவிஆர் திரையரங்கில் தாக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ''பிவிஆர்ல என்னடா ஆகும்? தியேட்டர்னா நாலு பேரு பார்க்க வருவாங்க. முடிஞ்சதும் வெளியே போவாங்க. அதை மறைஞ்சு நின்னு ஏன்டா போட்டோ எடுத்த? நேரில் வந்து எடுத்து தொலைய வேண்டியதுதான. இதை ஷேர் பண்ற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ... வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி'' என ப்ளூ சட்டை மாறன் அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்