Skip to main content

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி; விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Chidambaram Constituency people  Awareness Police

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம் தேர்தல் பணிகளும் முழுவீச்சிலும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமின்றி வாக்கை பதிவு செய்யும் வகையிலும் தேர்தல் சமயத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிதம்பரத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் மற்றும் சிதம்பரம் உட்கோட்ட காவல்துறையினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து துவங்கி வேணுகோபால் தெரு, கீழ வீதி, வடக்கு வீதி வழியாக பைசல் மஹால் திருமண மண்டபத்தில் முடிவடைந்தது.  இந்த பேரணியில் கடலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், சிதம்பரம் ஏ எஸ் பி ரகுபதி ,சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு, அண்ணாமலை நகர் ஆய்வாளர் கல்பனா, உதவி ஆய்வாளர் பரணிதரன் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்