Skip to main content

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல்

Published on 22/08/2017 | Edited on 22/08/2017
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் அனாதையாக கிடந்த பார்சலில் ரூ.5 கோடி தங்கம் இருந்தது. இதுதொடர்பாக தற்காலிக ஊழியர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர். சென்னை விமான நிலையத்தின் உள்பகுதியில் விமானங்கள் நிறுத்தும் இடத்தில் நேற்று,  டிராலி ஒன்று, மர்ம பார்சலுடன் இருந்தது. இதை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பகுதியில் டிராலியும், பார்சலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில், வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகித்தனர். இதையடுத்து, உடனடியாக விமான நிலைய மேலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்களுக்கு அவசர தகவல் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தியபின், அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிந்தது. இதையடுத்து அதை பிரித்து பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், அதில் புத்தம் புதிய தங்க நகைகள், தங்க கட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மொத்தம் 17 கிலோ தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.5.1 கோடி என கூறப்படுகிறது. அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சார்ந்த செய்திகள்