Skip to main content

பாச்சலூர் பள்ளி மாணவி மர்ம சாவு! பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் அதிரடி இடமாற்றம்!!

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

 3 school teachers transferred in action

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சலூர் கிராமத்தில் 5ம் வகுப்பு  படிக்கும் ஒன்பது வயதான மாணவி மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் 3 ஆசிரியர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கொடைக்கானல் கீழ் மலை கிராமமான பாச்சலூரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சத்தியராஜ். இவரது மகள் பிரித்திகா. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 15ம் தேதி மாணவி பள்ளி வளாகத்திற்குள் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

 

இதனைத் தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் சிறுமி உயிரிழந்து 2 வாரத்துக்கும் மேலாக எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இதனால் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில்தான் கடந்த 23ம் தேதி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதை தொடர்ந்து தென்மண்டல சி.பி. சி.ஐ. டி. எஸ்.பி.முத்தரசி தலைமையில் போலீசார் 5 குழுக்களாக பிரிந்து பள்ளியின் சுற்று வட்டார பகுதிகளை கண்காணித்தும், பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள், துப்புரவு ஊழியர், சத்துணவு பெண் பணியாளர் மற்றும் பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் சிறுமியின் பெற்றோர், பள்ளி அருகே வசிக்கும் மக்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 3 school teachers transferred in action

 

இந்த நிலையில் சிறுமி உயிரிழந்த நாளன்று பள்ளிக்கு வருகை புரிந்த தலைமையாசிரியர் முருகன், இடைநிலை ஆசிரியர் மணிவேல்ராஜ், பட்டதாரி ஆசிரியர் ராஜதுரை ஆகிய மூவரையும், மேல் மலை கிராமமான கிளாவரை, பூண்டி, பழம்புத்தூர் உள்ளிட்ட கிராமங்க ளுக்கு பணி மாற்றம் செய்து இருப்பதாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வரை பணிமாற்றம் செய்த 3 ஆசிரியர்களுமே சி.பி.சி.ஐ.டி. கட்டுப்பாட்டு விசாரணையில் இருந்தும் வருகிறார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்