Skip to main content

குழந்தை திருமணத்திற்கு மறுப்பு; சிறுமி தலையைத் துண்டித்து கொடூரக் கொலை!

Published on 11/05/2024 | Edited on 11/05/2024
If the child refuses to marry, the girl child is incident
சிறுமி - பிரகாஷ்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது 16 வயது மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பொது தேர்வு எழுதிய நிலையில் 10 வகுப்பிலும் தேர்ச்சிபெற்றுள்ளார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்துவந்துள்ளனர். இதனையொட்டி பிரகாஷ்(32) என்பவருக்கும், சிறுமிக்கும் திருமணம் பேசி முடித்து நிச்சியதார்த்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துள்ளது.

இந்நிலையில், சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்வது குழந்தை நலத்துறை ஆணையத்திற்கு தெரிய வந்துள்ளது. தகவலின் பெயரில் சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற குழந்தை நலத்துறை அதிகாரிகள் சிறுமி மைனர் என்பதால் அவருக்கு நீங்கள் திருமணம் செய்து வைக்க முடியாது. அப்படி திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் அவர் 18 வயது பூர்த்தி ஆன பிறகுதான் திருமணம் செய்து வைக்க முடியும் என்று விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் திருமணத்தை நிறுத்தி உள்ளனர். இந்த நிலையில் நிச்சயதார்தம் நின்று போனதால் ஆத்திரமடைந்த பிரகாஷ் சிறுமியின் வீட்டாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோரைத் தாக்கிய பிரகாஷ் சிறுமியையும் தாக்கி அவரின் தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றூள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய பிரகாஷை தேடி வருகின்றன

சார்ந்த செய்திகள்