Skip to main content

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்; சென்னையை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி!

Published on 18/05/2024 | Edited on 19/05/2024
Royal challenger bangalore won the play off match

ஐபிஎல் 2024இன் 65ஆவது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று (18-05-24) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூர் அணி சார்பில் பேட்டிங் செய்த விராட் கோலி 29 பந்துகளில் 4 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடித்து 47 ரன்கள் அடித்து அவுட்டானார். 

அடுத்து இறங்கிய டூ பிளஸ்சிஸ் 39 பந்துகளில் 3 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடித்து 54 ரன்கள் அடித்து அவுட்டானார். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் அடித்து பெங்களூர் அணி ஆட்டத்தை முடித்தது. இதனை தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் பந்து வீசிய, தாகூர் 2 விக்கெட்டும், தேஷ்பாண்டே மற்றும் சாந்த்னர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

அடுத்து 219 ரன்கள் இலக்கை முன்வைத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் பேட்டிங் செய்த ருத்துராக் எந்தவித ரன்களும் எடுக்காமல் அவுட்டானார். ரவிந்தீரா 37 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடித்து 61 ரன்கள் அடித்து அவுட்டானார். மிக்ச்செல் 4 ரன்களும், சிவம் துபே 7 ரன்களும், சாந்த்னர் 3 ரன்களும் அடித்து அவுட்டானார்கள். மகேந்திர சிங் தோனி 13 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்து 25 ரன்கள் அடித்து அவுட்டானார். ரவீந்திர ஜடேஜா 22 பந்துகளில் 3 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் அடித்து 42 ரன்கள்  அடித்து மைதானத்தில் இருந்தார்.  இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பந்து வீசிய மேக்ஸ்வெல், சிராஜ், தயால், கீரின், லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர். இதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி அபாரமாக வெற்றி பெற்றது.