Skip to main content

சத்தமில்லாமல் விக்கெட் கீப்பிங்கில் தோனி படைத்த சாதனை!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

dhoni

 

நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையைத் தோனி படைத்துள்ளார்.

 

13 -ஆவது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள், 7 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தொடர் தோல்விகளால் தோனியின் ஆட்டம் மற்றும் அவரது தலைமைப் பண்பு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் தொடரில் தோனி விக்கெட் கீப்பராக புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

 

10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணியின் விக்கெட் கீப்பரான தோனி, இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், 14 விக்கெட்டுகள் கேட்ச் மூலமும், 1 விக்கெட் ஸ்டம்பிங் மூலமும் வீழ்த்தியுள்ளார். தோனிக்கு அடுத்த இடத்தில் மும்பை அணியின் விக்கெட் கீப்பர் டி காக், 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ளார்.