Skip to main content

சைக்கிள் ஓட்டிய இரண்டு குழந்தைகள் பலி; நாகையில் சோகம்!

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
Two children who were riding a bicycle drowned

நாகப்பட்டினம்  மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள கோட்டூரை சேர்ந்த தம்பதிகள்  ரபீக், ரம்ஜான் பேகம் இவர்களின் மகன் ராசீத் (வயது 7). அதே பகுதியை சேர்ந்தவர் நவுசாத் அலி - நஜீலா பேகம் இவர்களின் மகன் முகம்மது நபீஷ் (வயது 6). ரம்ஜான் பேகம் மற்றும் நஜீலா பேகம் இருவரும் உடன்பிறந்த அக்கா தங்கை ஆவார்கள். இருவருடைய கணவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிவிடுமுறை என்பதால் இரண்டு குழந்தைகளும் சைக்கிள் ஓட்டி விளையாடியுள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராவிதமாக  அருகில் உள்ள அய்யனார் குளத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சைக்கிள் ஓட்டி விளையாடிய குழந்தைகளை காணவில்லை. ஆனால் சைக்கிள் மட்டும் குளத்தின் கரையில் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்து குளத்தில் இறங்கி தேடியுள்ளனர். அப்போது நீரில் மூழ்கி மயக்கமான நிலையில் இரண்டு குழந்தைகளையும் மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

Two children who were riding a bicycle drowned

குளத்தில் மூழ்கி 2  குழந்தைகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்