Skip to main content

மாவட்ட கல்வி அலுவலர் நியமனத்தில் விதிமீறல்? நீதிமன்றம் செல்ல தயாராகும் ஆசிரியர்கள்

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

 

  புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, புதுக்கோட்டை, இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளது. இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரியாக இருந்த அண்ணாதுரை ரஞ்சன் இன்று பிப்ரவரி 28 ந் தேதியுடன் பணிநிறைவு பெற்றார். அந்த இடத்திற்கு தற்காலிகமாக  தரவரிசை அடிப்படையில் மூத்த ஆசிரியரை நியமனம் செய்யப்படுவார் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். 

 

te


மூப்பு பட்டியலில் இருந்த ஆசிரியர்கள் தங்களுக்கு அழைப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நேரத்தில் பெருமானாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பணி ஏற்றுக் கொண்டார். இதைப்பார்த்த வரிசையில் காத்திருந்த ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியானது. அதாவது இந்த பொறுப்புக்கு வரும் ஆசிரியர்கள் தர வரிசையில் இல்லாதவர் எப்படி திடீரெனெ அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டார் என்றும் மேலும் அவர் மீது 17 பி இருந்தது. 


கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு என வழக்கு இருந்தது. அந்த வழக்குகள் முடிந்ததா? நிலுவையில் உள்ளதா என்பதே தெரியாத நிலையில் வரிசையில் பின்னால் இருந்தவரை முதல் இடத்திற்கு கொண்டு வந்து பொறுப்பு பணி வழங்கி இருப்பதில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறும் ஆசிரியர்கள் முறையாக காயாம்பட்டி தலைமை ஆசிரியர் அல்லது பெருங்களூர் தலைமை ஆசிரியர் ராஜ்குமார் போன்றவர்கள் வரிசையில் முன்னால் இருப்பவர்களை எப்படி உதாசீனப்படுத்தினார்கள்?

 

இந்த பணி நியமனத்தில் பெரிய முறைகேடு நடந்துள்ளது. அதற்கு காரணம் மாரிமுத்து அதிமுக மாவட்ட பொறுப்பில் உள்ளவர்களின் பின்னால் இருப்பது எப்பவும் கல்வி அலுவலகத்திலேயே இருப்பதாலும் விதிமுறைகளை பின்பற்றாமல் நியமனம் செய்யப்பட்டிருக்கலாம்.   


எல்லாவற்றுக்கும் நீதி கேட்டு நீதிமன்றத்தின் கதவுகளை தான் தட்ட வேண்டிய நிலை உள்ளது என்றனர் வரிசையில் முன்னால் இருக்கும் ஆசிரியர்கள் வருத்தமாக..
மாவட்ட கல்வி அதிகாரி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை மாநில கல்வி அதிகாரிகள் தான் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் மாநிலம் முழுவதும் விதிமுறை மீறல்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. இது சம்மந்தமாக மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் முதல் கல்வி அமைச்சர், கல்வி துறை உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் பறந்து கொண்டிருக்கிறது.
   

சார்ந்த செய்திகள்