Skip to main content

அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து; 4 பேர் உயிரிழப்பு

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
An early morning accident; 4 people lost their lives

செங்கல்பட்டு அருகே ஆம்னி பேருந்து, லாரி, அரசு பேருந்து என மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு அருகே பழமத்தூர் பகுதியில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி மற்றும் ஆம்னி பேருந்து அரசு பேருந்து ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டது விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.அதிகாலையில் ஏற்பட்ட இந்த கோர சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்