Skip to main content

மேகமலை அருவிக்கு செல்ல தடை!

Published on 19/05/2024 | Edited on 19/05/2024
Ban to go to Meghamalai waterfall

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.

இதற்கிடையே தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி முதல் (17.05.2024) முதல் வரும் 20 ஆம் தேதி வரை (நாளை) என அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே சிவப்பு நிற எச்சரிக்கையை விடுக்கப்படுகிறது. அதே சமயம் மே 21 ஆம் தேதி (நாளை மறுநாள்) வரை தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அச்சமயத்தில் மணிக்கு 50 கி.மீ. வேகம் வரை தரைக்காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதே போன்று கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது. கேரளாவில் 20 ஆம் தேதி அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் தேனியில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள கோம்பை தொழு மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மேகமலை அருவிக்குச் செல்ல இன்று (19.05.2024) முதல் 3 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேகமலை அருவிக்குச் செல்ல வரும் 21 ஆம் தேதி வரை தடை விதித்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் மேகமலை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்