Skip to main content

ரயிலில் சிக்கி 3 மான்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
3 deers got trapped in the train and passed away tragically!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் - மேல்பாக்கம் ரயில் நிலையங்கள் இடையே ரயிலில் சிக்கி மூன்று மான்கள் உயிரிழந்ததாக ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் உயிரிழந்த மூன்று மான்களைக் கைப்பற்றி வனத்துறையினருக்கு தகவல் அளித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரும்பாலான வனவிலங்குகள் கோடை காலத்தில் தண்ணீர் தேடி காட்டை விட்டு கிராமப்புறங்களுக்கு வரும்போது இது போன்று ரயிலில் சிக்கி உயிரிழந்து வருவது அதிகரித்து வருவதாகவும் இதனைத் தடுக்கும் வகையிலும் மேலும் வனவிலங்குகளை பாதுகாக்கும் விதமாகவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்..

சார்ந்த செய்திகள்